நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயா ஏரியில் சுற்றுலா படகு தீப்பற்றியது

கோலாலம்பூர்: 

புத்ராஜெயா பிரிசிண்ட் 19-இல் உள்ள படகு பராமரிப்பு மையத்தில் இருந்த சுற்றுலா படகு ஒன்று நேற்று இரவு தீப்பற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய தீயணைப்பு, மீட்பு துறை (JBPM) வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தமது தரப்பு மாலை 5.18 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாகப் புத்ராஜெயா செயல்பாட்டு மையம் தெரிவித்ததாக JBPM தகவல் வெளியிட்டது. 

அதனைத் தொடர்ந்து பிரிசிண்ட் 14, பிரிசிண்ட் 7 தீயணைப்பு, மீட்பு நிலையங்களில் இருந்து 16 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

“தீ அணைக்கும் நடவடிக்கை இரண்டு நீர் குழாய் வழிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தீயைக் கட்டுப்படுத்த ஒரு நுரை வழியும் பயன்படுத்தப்பட்டது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset