செய்திகள் மலேசியா
பயங்கரவாத நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க ஐ.எஸ். தொடர்புள்ள 6 நபர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது: ஐஜிபி
கோலாலம்பூர்:
பயங்கரவாத நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க ஐ.எஸ். தொடர்புள்ள 6 நபர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
தேசிய போலிஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.
பயங்கரவாதக் குழுவான 'ஐ.எஸ். உடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆறு நபர்கள், பயங்கரவாத நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி பயன்பாடுகளை தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது.
சந்தேக நபர்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொண்டதாகவும், அண்டை நாடுகளில் உள்ள தனிநபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வலையமைப்பில் அவர்களின் ஈடுபாட்டின் அளவைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகிறது.
வாட்ஸ்அப் குழுவில் நடந்த விவாதங்கள், போலிஸ் அதிகாரிகள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட தீவிரவாதக் கருத்துக்களைத் தொட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 10:50 pm
அசாம் பாக்கி உடனடியாக பதவி விலக வேண்டும்: பெர்சே
March 6, 2026, 5:19 pm
அதிகாலை தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்
March 6, 2026, 5:18 pm
இணையத்தில் தீவிரவாத பிரச்சாரம்: இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது
March 6, 2026, 5:17 pm
போலி முதலீடு மோசடி: 30 லட்சம் ரிங்கிட்டை இழந்த மருத்துவர்
March 6, 2026, 5:15 pm
பட்டாசு விற்பனை கூடத்தில் திடீர் தீவிபத்து: 26 வயது இளைஞர் காயம்
March 6, 2026, 4:47 pm
