நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெத்தோங் நகரில் காவாய் டாயாக் பேரணி: 3,000 சுற்றுப்பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

கூச்சிங்:

இவ்வாண்டு ஜூனில் மத்திய சராவாக் நகரமான பெத்தோங், காவாய் டாயாக் பேரணி, திறந்த இல்ல உபசரிப்பு கொண்டாட்டத்துடன் களைக்கட்ட உள்ளது.

சராவாக் சுற்றுலா கூட்டமைப்பால் (STF) ஏற்பாடு செய்யப்படும் இந்த விழா, தற்போது நான்காவது ஆண்டில் நடைபெறுவதுடன் இந்தாண்டு 3,000 சுற்றுப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவாய் விழா சராவாக்கின் டாயாக் சமூகத்தின் அறுவடை காலத்தை கொண்டாடும் முக்கிய நாளாகும் என்று மாநில சுற்றுலா, படைப்பாற்றல், கலை செயல்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா தெரிவித்தார்.

மேலும், இது சராவாக்கின் அன்பான வரவேற்பையும், வலுவான சமூக உணர்வையும் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்த விழாவும் பேரணியும், டாயாக் பாரம்பரியத்தில் செழித்துள்ள பெத்தோங் நகரில் நடைபெறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இது மாவட்டத்தின் பண்பாட்டு மரபை வெளிப்படுத்தவும், உள்ளூர் தொழிலாளர்கள், கைவினைவோர், வியாபாரிகளுக்கு சுற்றுலா செயல்பாடுகளால் பயனடையச் செய்யும் அரிய வாய்ப்பாகும்,” என்றார் அவர்.

 STF காவாய் பேரணியும் திறந்த இல்ல உபசரிப்பும் 'Visit Malaysia 2026'-உடன்  இணங்க சராவாக் பண்பாட்டு அடையாளத்தையும், பல்துறையறிவையும் வெளிப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். 

காவாய் பேரணி ஜூன் 6 காலை பெத்தோங் நகர மையத்தில் நடைபெற்று பிற்பகலில் எங்கேராஞ்சி நீண்ட வீட்டில் திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறும் என்று STF துணை செயலாளர் அவாங் சைபெலுட்டின் அவாங் கரீம் கூறினார்.

பயணிகள் விழாவின்போது நதிப்பகுதியிலான ஆற்றங்கரை சுற்றுலா, கிளாம்பிங், பாரம்பரிய பான்சோ சமையல் வகுப்பு, கைவினைப் பட்டறைகள், வெளிப்புற உயிர்வாழும் திறன்கள் பயிற்சிகளில் பங்கெடுக்கலாம் என்று மேலும் பேசிய அவர் தெரிவித்தார்.

இந்த கொண்டாட்டங்கள் சராவாக், சபா, கலிமந்தான் கலைஞர்களுடன் ஒரு காவாய் காமாத்தான் இசை நிகழ்ச்சியில் முடியும்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset