செய்திகள் மலேசியா
சபிண்டோ ரமலான் பசாரில் ஏற்பட்ட மோதல்: 8 பேர் கைது
தவாவ்:
சபிண்டோ ரமலான் பசார் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு வெளிநாட்டவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலான சம்பவத்தின் வீடியோ பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு போலிசார் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் தெரிவித்தார்.
இரண்டு கும்பல்களுக்கிடையே அதிருப்தியின் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சங்கிலியைக் கைப்பற்றியதாகத் தவாவ் காவல் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவு உறுதிபடுத்தியுள்ளது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பந்தப்பட்டவர்களை 4 நாள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்க காவல்துறை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவுள்ளது.
சமீபத்தில் பசாரின் நடுப்பாதையில் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்த காணொலி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 7, 2026, 11:56 am
புத்ராஜெயா ஏரியில் சுற்றுலா படகு தீப்பற்றியது
March 7, 2026, 11:29 am
அரசு SEGiM அமைப்பை உருவாக்க ஒப்புதல்: துணைப் பிரதமர்
March 7, 2026, 11:05 am
கார் ஓட்டுநர் தூங்கியதால் சோகமாக முடிந்த பயணம்
March 7, 2026, 10:59 am
கத்தாரில் உள்ள 323 மலேசியர்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்
March 7, 2026, 10:52 am
வட்டார முன்னேற்றங்கள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் டத்தோஸ்ரீ அன்வார் விவாதித்தார்
March 7, 2026, 10:40 am
