செய்திகள் மலேசியா
கார் ஓட்டுநர் தூங்கியதால் சோகமாக முடிந்த பயணம்
கோத்தா கினபாலு:
கடந்த வியாழக்கிழமை, மார்ச் 5ஆம் தேதி மெரொத்தாய்–தவாவ் சாலையில் எதிரே வந்த கார் மோதியதில் ஒரு இளம்பெண் உயிரிழந்ததுடன் அவளுடைய தம்பி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
மாலை சுமார் 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 44 வயதுடைய கார் ஓட்டுநர் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது தூங்கியதாக நம்பப்படுகிறது. இதனால் கார் எதிர்புற பாதையில் சென்று, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் மீதும் மோதியது.
விபத்துக்குப் பிறகு இருவரும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கார் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று தவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் (OCPD) உதவி ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுடைய எஸ்பிஎம் தேர்வு முடித்த இளம்பெண்ணும், 17 வயதுடைய தொழில்நுட்பக் கல்லூரி மாணவருமான அவளது தம்பியும் ஆவர். இருவரும் முதலில் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர்,” என்றார் அவர்.
18 வயதுடைய அந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை, மார்ச் 6 அதிகாலை 4.08 மணியளவில் பலத்த காயங்களுக்கு உட்பட்டு உயிரிழந்தாக அவர் கூறினார்.
பொதுமக்கள் சாலையில் பயணம் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தூக்கம் வருவதாக உணர்ந்தால் மைக்ரோ-ஸ்லீப் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் ஜாஸ்மின் அறிவுறுத்தினார்.
மேலும், மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது கூட விபத்துகளுக்கு காரணமாகும் எனவும் அவர் எச்சரித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 7, 2026, 12:37 pm
சபிண்டோ ரமலான் பசாரில் ஏற்பட்ட மோதல்: 8 பேர் கைது
March 7, 2026, 11:56 am
புத்ராஜெயா ஏரியில் சுற்றுலா படகு தீப்பற்றியது
March 7, 2026, 11:29 am
அரசு SEGiM அமைப்பை உருவாக்க ஒப்புதல்: துணைப் பிரதமர்
March 7, 2026, 10:59 am
கத்தாரில் உள்ள 323 மலேசியர்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்
March 7, 2026, 10:52 am
வட்டார முன்னேற்றங்கள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் டத்தோஸ்ரீ அன்வார் விவாதித்தார்
March 7, 2026, 10:40 am
