நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதுபிக்கப்பட்ட கோல குபு பாரு சந்தையில் உள்ளப் பிரச்சினைகளை சுட்டிக் காட்டியதால் வணிகரின் உரிமம் பறிக்கப்பட்டது: சுஹாகாமில் புகார்

கோலாலம்பூர்:

புதுபிக்கப்பட்ட கோல குபு பாரு சந்தையில் உள்ளப் பிரச்சினைகளை சுட்டிக் காட்டியதால் வணிகரின் உரிமம் பறிக்கப்பட்டது.

இது தொடர்பில் சுஹாகாமில் புகார் செய்யப்பட்டது என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் கூறினார்.

கோல குபு பாருவில் உள்ள காலை சந்தையில் சகோதரர் யாப் தோங் ஃபாங் கோழி வியாபாரம் செய்து வருகிறார்.

ஹலால் அடிப்படையில் அவர் இந்த வியாபாரத்தை செய்து வருகிறார்.

குறிப்பாக இந்நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்தே அவரின் தாயார் இங்கு வியாபாரம் செய்துள்ளார்.

பல தலைமுறைகளாக அவரிகளின் வியாபாரம் இங்கு தொடர்கிறது. 

இந்நிலையில் கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் செலவில் கோல குபு பாரு சந்தை மேம்படுத்தப்பட்டது.

ஆனால் அந்த மேம்பாட்டு பணிகளில் பல பிரச்சினைகள் உள்ளது. இப்பிரச்சினைகளை யாப் தோங் ஃபாங் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனால் ஐந்து மேஜைகளை போட்டு வியாபாரம் செய்து வந்த அவருக்கு முறையான இடம் கிடைக்கவில்லை.

அவரின் வியாபார உரிமமும் பறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் போலிஸ் புகாருடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என சுஹாகாமில் இன்று மகஜர் வழங்கப்பட்டது.

மகஜரை பெற்றுக் கொண்ட சுஹாகாம் ஆணையரும் இது குறித்து விசாரிக்கப்படும் என வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் யாப் தோங் ஃபாங்கிற்கு உரிய நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புவதாக டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset