
செய்திகள் மலேசியா
மஞ்சோங் இந்து சங்கம் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது: பேராக் இந்து சங்கத்தின் தலைவர் பெ.சுந்தரசேகரர் தகவல்
மஞ்சோங்:
நமக்கென்று சொந்த இடம் அவசியம் என்பதை நினைவுறுத்தி மலேசிய இந்து சங்கம் மஞ்சோங் வட்டார பேரவையின் சேவை நடவடிக்கை மையம் திறப்பு விழா கண்டது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று பேராக் இந்து சங்கத்தின் தலைவர் பெ. சுந்தரசேகரர் இந்த மையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துக்கொண்டபோது கூறினார்.
இதற்கு முன்னதாக காணொலி வாயிலாக சங்க வரலாற்று ஆவணப்படம் உதவியோடு இந்த மையம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரைக்கான வரிசைகிரமாக அதன் மேம்பாட்டை தெள்ளத்தெளிவாக விளக்கிய கட்டடக்குழு தலைவரும் பேராக் இந்து சங்கத்தின் துணைத்தலைவருமான ந. பெரியசாமிக்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மலேசிய இந்து சங்கம் ஆலயங்களுடன் இணைந்து சேவை செய்து வருகிறது. அதில் எந்தவொரு மாற்று கருத்தும் கிடையாது. இருப்பினும், மற்றவர்களின் இடையூறு இல்லாமல் சுயமாக செயல்பட நமக்கு ஒரு பணிமனை அல்லது சேவை மையம் அவசியம் தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மையம் உருவானது. இந்த மையம் உருவாக அனைத்து உதவிகளும் வழங்கி உதவிய அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தற்போது பேராக்கில் மஞ்சோங் வட்டாரப்பேரவையை போல ஒரு சில வட்டாரப் பேரவைகள் சொந்த கட்டடம் கொண்டுள்ளனர். அவற்றில், ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான் மற்றும் கம்பார் வட்டாரப் பேரவைகள் சொந்த கட்டடம் கொண்டவர்கள். அவர்களுடன் பேராக் மாநில இந்து சங்கமும் சொந்த கட்டடத்தில் இயங்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வேளையில் இந்த இந்து சங்க மஞ்சோங் வட்டார பேரவை மற்றும் சொந்த கட்டடம் வாங்க உதவிய நன்கொடையாளர்கள் மற்றும் கொடை நெஞ்சர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில சார்பில் நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த கொடை நெஞ்சர்கள் இல்லையென்றால் இந்த கட்டடத்தை வாங்கி இருக்க முடியாது. அதே வேளையில் இந்த மையத்தில் எல். இ.டி. தொலைக்காட்சியை வழங்கி உதவிய தொழிலதிபர் ஜி.எம். ரவீந்திரன் குடும்பதாருக்கும் நன்றி கூறிக்கொண்டார்.அதோடு, இவ்வேளையில் மலேசிய இந்து சங்கம் மஞ்சோங் வட்டாரப் பேரவையின் நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில், மஞ்சோங் வட்டாரப் பேரவையின் தலைவர் த.இந்திராணி மற்றும் துணைத்தலைவர் மொ.சண்முகம் மற்றும் கட்டடக்குழு தலைவர் ந. பெரியசாமி ஆகியோர் சிறப்பு பிரமுகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்தனர்.
-ஆர். பாலசந்தர்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm