நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்புடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஹசிம் முனீர் சந்தித்து பேசினார்.

இஸ்ரேல் -ஈரான் இடையிலான மோதல் வலுத்துவரும் நிலையில் ஈரானுடன் எல்லையை பகிர்ந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதியை டிரம்ப் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, முனீருடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கூறுகையில், இந்தியா பாகிஸ்தான் சண்டையை எப்படி மோடி நிறுத்தினாரோ அப்படி பாகிஸ்தானில் முனீர் அதிகாரத்துடன் போரை நிறுத்தினார் என்றார்.

அமெரிக்க அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் முனீருக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.

ஈரானுடன் பாகிஸ்தான் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆனால், எதனால் இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்ற உறுதியான தகவல் உடனடியாக வெளியாகவில்லை. வெளிநாட்டு ராணுவத் தலைமை தளபதி ஒருவருக்கு அமெரிக்க அதிபர் மதிய விருந்து அளிப்பது அரிதாகவே நடைபெற்றுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset