நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்

நியூயார்க்:

அமெரிக்காவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் வேளையில் ஓடுபாதையிலிருந்த மான்கள்மீது மோதியது.

சம்பவம் கடந்த வியாழக்கிழமை அலாஸ்கா மாநிலத்தில் உள்ள கொடியக் பென்னி பென்சன் ஸ்டேட் (Kodiak Benny Benson State) விமான நிலையத்தில் நடந்தது.

தரையிறங்கவிருக்கும் சமயத்தில் ஓடுபாதையில் மான்கள் இருப்பதை விமானிகள் கவனித்தனர்.

அதனை விமானக் கட்டுப்பாட்டு நிலையத்திம் தெரிவித்தனர்.

எனினும் விமானம் தரையிறங்குவதை நிறுத்த முடியாததால் மான்களின்மீது அது மோத நேர்ந்தது.

சம்பவத்தில் குறைந்தது 2 மான்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானத்திற்குச் சேதம் ஏற்பட்டது ஆனால் விமானத்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவத்திற்குப் பிறகு ஓடுபாதை மூடப்பட்டு மான்களின் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அன்றைய தினம் விமான நிலையத்தில் இயங்கிய அனைத்து விமானச் சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் விமானங்கள் விலங்குகள்மீது மோதிய சம்பவங்களின் எண்ணிக்கை 22,000க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஆதாரம்: CNN

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset