நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்திய இறக்குமதிக்கு  அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதித்துள்ளார்.

இரண்டுமே நாளை ஆகஸ்ட் 1 தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.

இந்தியாவுடன் அமெரிக்காவின் வர்த்தகம் மிகவும் குறைவு; ஆனால் இந்தியா விதிக்கும் வரி அதிகம் என்கிறார் திரு டிரம்ப்.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதங்களையும் எரிசக்தியையும் வாங்குகிறது; அதற்காக அபராதம் விதிக்கப்படுவதாகஅமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அபராதம் எவ்வளவு விதிக்கப்படும் என்று அவர் விளக்கிச் சொல்லவில்லை. விரைவில் அறிவிப்பார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார்.

இந்தியா மீது விதிக்கப்படும் அபராதம் மற்ற நாடுகளுக்கும் பாடமாக அமையும் என்று அவர் கூறினார்.

ஆதாரம்: வாஷிங்டன் போஸ்ட்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset