நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு

லண்டன்: 

பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது.

தங்களது நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்காவிட்டால் செப்டம்பா் மாதம் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிக்கப்படும் என்று  பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

காஸாவில் நிலவும் கொடுமையான மனிதாபிமானமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உடனடி போா் நிறுத்தம் மற்றும் நீண்டகால அமைதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்தாகவேண்டும்.

அவ்வாறு செய்ய அந்த நாடு தவறினால், செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன் அங்கீகரிக்கும்.

காஸா பகுதியில் உணவுப் பொருள்களை தாராளமாக விநியோகிப்பதன் மூலம் தற்போதைய நிலையை மாற்றும். அதனால்தான் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கும் அறிவிப்பு இஸ்ரேலுக்கான நிபந்தனைகளுடன் வெளியிடப்படுகிறது என்றாா் ஸ்டார்மர்.

காஸா மக்களை பட்டினியால் தவிக்கச் செய்யும்  இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset