நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ

சிங்கப்பூர்:

மார்சிலிங் புளோக் 4இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று தீப்பற்றிகொண்டது.

சிங்கப்பூரில் குடியிருப்புப் பகுதியில் இரண்டு நாள்களில் ஏற்பட்டிருக்கும் இரண்டாவது பெரிய தீச்சம்பவம் இது.

சுமார் 15 நிமிடத்தில் தீயணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த புளோக்கில் வசிப்போர் பெரிய வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாக CNAயிடம் கூறினர்.

நடைபாதையில் மறுமுனை வரை அடர்ந்த கரும்புகை பரவுவதைப் பார்க்க முடிந்தது.

சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விரைவில் விவரங்களைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset