நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: 

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் அர்த்தமற்றவை என பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நம்பகமான விசாரணையோ, ஆதாரமோ இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டியது. மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் அர்த்தமற்றது.

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் என்பது  சுயநல நோக்கத்துடன் இந்தியாவால் கட்டமைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset