செய்திகள் உலகம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று காலை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் எம்-2 மோட்டார் பாதை வழியாகசென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் ஒரு டயர் வெடித்தது.
இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டயர் வெடித்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 11:02 am
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு; அணு மையம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
March 4, 2026, 10:14 am
முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்
March 3, 2026, 11:32 pm
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
அமெரிக்கா, இஸ்ரேல் மீது நரகத்தின் வாயில்கள் நொடிக்கு நொடி விரிவடையும்
March 3, 2026, 11:55 am
14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கா உத்தரவு
March 3, 2026, 11:43 am
