
செய்திகள் உலகம்
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் சுந்தர் பிச்சை
வாஷிங்டன்:
ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 53 வயதான சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
தமிழகத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது கல்வியறிவின் மூலம் ஸ்டான்போர்டு பல்கலையில் கடந்த 1993-ல் உதவித் தொகை பெற்று உயர்கல்வியை முடித்தவர் சுந்தர் பிச்சை. பின்பு இவர் கடந்த 2004-ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அளவுக்கு தனது திறனை வளர்த்துக் கொண்டார்.
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை 2019-ல் ஏற்றுக் கொண்டார்.
சுந்தர் பிச்சை தலைமைப் பொறுப்பில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் ஆல்பபெட் நிறுவன பங்கின் விலை பல மடங்கு அதிகரித்து 2023-லிருந்து முதலீட்டாளர்களுக்கு 120 சதவீத வருவாயை வழங்கியுள்ளது.
அந்த வகையில், சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆல்பபெட் நிறுவனர்களான லாரி பேஜ் 171.2 பில்லியன் டாலர், செர்ஜி பிரின் 160.4 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்களில் ஏழு பேரில் ஒருவராக இடம்பெற்றுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 2:57 pm
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
July 26, 2025, 10:11 am
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் மரணம்
July 26, 2025, 9:52 am
பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்
July 25, 2025, 4:31 pm
பாலஸ்தீனம் தனி நாடு: பிரான்ஸ் அங்கீகாரம்
July 25, 2025, 11:50 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான எல்லையில் மோதல்: 14 பேர் மரணம்
July 25, 2025, 10:24 am
ரஷ்யாவில் 50 பேரை ஏற்றிச்சென்ற விமானம் வெடித்து சிதறியது: யாரும் உயிர்பிழைத்ததாக அறிகுறி இல்லை
July 24, 2025, 2:54 pm