
செய்திகள் மலேசியா
துருக்மெனிஸ்தான் வழியாக ஈரானிலிருந்து மலேசியர்கள் மீட்கப்படுவார்கள்: முஹம்மத் ஹசான்
கோலாலம்பூர்:
ஈரானிலுள்ள தூதரக ஊழியர்கள் உட்பட மலேசியர்கள் துருக்மெனிஸ்தான் வழியாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan தெரிவித்தார்.
தெஹ்ரானின் வடகிழக்கு பகுதியிலிருந்து நிலவழியாக மலேசியர்கள் துருக்மெனிஸ்தான் எல்லைக்கு அழைத்து வருவார்கள் என்று Mohamad Hasan குறிப்பிட்டார்.
எல்லையிலிருந்து துருக்மெனிஸ்தான் தலைநகர் Ashgabat-ற்கு மலேசியர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று Mohamad Hasan கூறினார்.
நிரந்த மலேசியக் குடியுரிமை பெற்றவர், 2 ஈரானிய தம்பதிகள், ஒரு சீங்கப்பூரர் உட்பட மொத்தம் 19 பேர் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று Mohamad Hasan உறுதிப்படுத்தினார்.
நான்கு மலேசிய மாணவர்கள் ஈரானில் இருப்பதாகத் தெரிவித்த நிலையில் அவர்கள் தாயகம் அழைத்து வரப்பட மாட்டார்கள் என்று Mohamad Hasan தெரிவித்தார்.
மேலும், தாயகம் திரும்ப மறுக்கும் மலேசியர்கள் தங்களின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வக் கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று Mohamad Hasan கேட்டுக் கொண்டார்.
அவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு மலேசிய அரசு பொறுப்பேற்காது என்றும் Mohamad Hasan திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm