
செய்திகள் மலேசியா
பிரிக்பீல்ட்சில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் நண்பர்களையும் காயமடைந்தவர்களையும் ஏன் காவலில் வைக்க வேண்டும்?: வழக்கறிஞர்
கோலாலம்பூர்:
பிரிக்பீல்ட்சில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் நண்பர்களையும் காயமடைந்தவர்களையும் ஏன் காவலில் வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிவாநந்தன் ராகவா நீதிமன்றத்தில் இக்கேள்வியை எழுப்பினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஓர் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களுக்கு எதிராக போலிசார் தாக்கல் செய்த ஏழு நாள் தடுப்புக்காவல் விண்ணப்பத்தை இன்று நீதிபதி நிராகரித்தார்.
வழக்கறிஞர் சிவாநந்தன் ராகவாவின் சமர்ப்பிப்புகளில் திருப்தி அடைந்த பின்னர் நீதிபதி ஐனூர் சுஹாடா ஜெஃப்ரி இந்த முடிவை எடுத்தார்.
எனது வாடிக்கையாளர்கள் அனைவரும் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் அல்ல.
மாறாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள். மரணமடைந்தவருடன் மேஜையில் அமர்ந்திருந்திருந்தனர்.
அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அல்ல. அவர்கள் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள். தாக்குதலுக்கு இலக்கானவர்களும் கூட என்று அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஐந்து நபர்களுக்கு எதிராக போலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட தடுப்பு காவல் விண்ணப்ப நடவடிக்கைகளில் நான் கலந்து கொண்டேன்.
கொலை குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் ஏழு நாள் காவலில் வைக்க போலிசார் விண்ணப்பித்தனர்.
ஆனால் எனது வாடிக்கையாளர்கள் யாரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை என்ற அடிப்படையில் அது ஆட்சேபிக்கப்பட்டதாக சிவநந்தன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm