
செய்திகள் மலேசியா
தனியுரிமையை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் ஹாடியுடனான புகைப்படத்தை சுகாதார அமைச்சர் நீக்கினார்
புத்ராஜெயா:
தனியுரிமையை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் ஹாடியுடனான புகைப்படத்தை சுகாதார அமைச்சர் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கினார்.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மத் நேற்று பாஸ் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங்கை ஐஜேஎன்னில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் புகைப்படங்களை அவர் தனது முகநூலில் பதிவேற்றினார்.
இந்நிலையில் ஹாடியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த வருகை குடும்பத்தின் தனியுரிமையை மதிக்கவில்லை.
மேலும் மருத்துவமனை வருகைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மீறுவதாகவும் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து அமைச்சர் அப்புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கியுள்ளார்.
முன்னதாக ஹாடியின் மகனும், பத்து புருக் சட்டமன்ற உறுப்பினருமானடாக்டர் முஹம்மது கலீல் அமைச்சரின் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm