செய்திகள் மலேசியா
11 ஆண்டுகள் போராட்டம்: Sisters in Islam (SIS) அமைப்புக்கு எதிரான ஃபத்வா செல்லாது எனக் கூட்டரசு நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
11 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இஸ்லாமிய பெண்கள் உரிமைகள் அமைப்பான, Sisters in Islam (SIS) க்கு எதிரான சிலாங்கூர் இஸ்லாமிய மத மன்றத்தின் ஃபத்வாவைக் கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்யது.
SIS அமைப்பு இஸ்லாமிய மதப் போதனைகளிலிருந்து விலகிய அமைப்பு இல்லை என்று கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி Tun Tengku Maimun Tuan Mat தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இந்த அமைப்பு இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கொள்கையைப் பின்பற்றவில்லை என்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளதாகவும் Tun Tengku Maimun Tuan Mat தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு சிலாங்கூர் இஸ்லாமிய மத மன்றம் SIS அமைப்பு தவறான போதனைகளைக் கற்பிப்பதாகக் கூறி அதற்கு எதிராக 4 ஃபத்வா கொண்ட ஆணையைப் பிறப்பித்தது.
அதில் SIS அமைப்பு இஸ்லாமிய மதப் போதனைகளிலிருந்து விலகி தனிநபர் சுதந்திரத்தை வலியுறுத்தும் கொள்கையைப் பின்பற்றுவதாகவும் மற்ற மதக் கூறுகளைப் பின்பற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், SIS அமைப்பு வெளியீடும் எந்தவொரு
வெளியீடுகளுக்கும் தடை விதிப்பதோடு அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் அந்த ஃபத்வாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இஸ்லாமிய மதக் கொள்கைக்கு எதிரான SIS அமைப்பின் சமூக வலைத் தளங்களை மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) முடக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.
SIS அமைப்பின் வழிக்காட்டல்களை விடுத்து இஸ்லாமிய மதக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் அந்த ஃபத்வாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஃபத்வாகளை எதிர்த்து SIS அமைப்பு சிலாங்கூர் இஸ்லாமிய மத மன்றத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
