நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகப் பல்கலைக்கழக தரவரிசை: 58-ஆவது இடத்தில் மலாயா பல்கலைக்கழகம்

கோலாலம்பூர்: 

2026-ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், மலாயா பல்கலைக்கழகம் 80.1 மதிப்பெண்களைப் பெற்று 58-ஆவது இடத்தில் உள்ளது. 

கடந்தாண்டு இந்தத் தரவரிசையில் மலாயா பல்கலைக்கழகம் 60-ஆவது இடத்தில் இருந்தது.

மலேசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக மலாயா பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இப்பல்கலைக்கழகத்தில் 17,222 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில் 4,349 மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்களாவர். 

ஆசியளவிலான தரவரிசையில் மலாயா பல்கலைக்கழகம் 16-ஆவது இடத்தில் உள்ளது. 

ஆசியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது.

2026-ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி மலேசிய தேசிய பல்கலைக்கழகம் 126வது இடத்தைப் பிடித்துள்ளது. 

மலேசிய புத்ரா பல்கலைக்கழகமும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமும் இப்பட்டியலில் 134-ஆவது இடத்தில் உள்ளது. 

மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இப்பட்டியலில் 153-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

தரவரிசையில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் கொண்ட நாடுகளில், மலேசியா உலகளவில் மிக அதிக முன்னேற்ற வீதத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் 32 பல்கலைக்கழகங்களில் 70%, தரவரிசையில் முதன்மை இடங்களில் உள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset