
செய்திகள் மலேசியா
கூடுதல் உத்தரவு தொடர்பான நீதிமன்ற மேல்முறையீட்டு நடவடிக்கைகளில் டத்தோஸ்ரீ நஜிப் கலந்து கொள்ள அனுமதி
கோலாலம்பூர்:
கூடுதல் உத்தரவு தொடர்பான நீதிமன்ற மேல்முறையீட்டு நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு அனுமதி கிடைத்துள்ளது.
ஒரு உத்தரவுக்கான நீதித்துறை மறுஆய்வு வழக்கு தொடர்பான சட்டத் துறை தலைவரின் மேல்முறையீட்டு நடவடிக்கைகளில் அவர் கலந்து கொள்ளலாம்.
கூட்டரசு நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு ஜூலை 1 முதல் இரண்டு நாட்களுக்கு விசாரிக்கப்படும் என ஏப்ரல் 28ஆம் தேதியன்று நிர்ணயித்தது.
இந்த விசாரணையில் ஆஜராவதற்கான நஜிப்பின் விண்ணப்பத்தை மலாயா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ ஹஸ்னா முகமது ஹாஷிம் தலைமையிலான மூன்று கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு ஏற்றுக்கொண்டது.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் டத்தோ ஜபரியா முகமது யூசோப், டத்தோ ஹனிபா ஃபரிகுல்லா ஆகியோரும் உடன் அமர்ந்திருந்தனர்.
வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா பிரதிநிதித்துவப்படுத்தும் நஜிப்பின் விண்ணப்பத்தை ஐன்னா ஷெரினா சாய்போலமின்எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm