
செய்திகள் மலேசியா
50,000 ரிங்கிட் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு: ஆலயத் தலைவர், செயலாளருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
மலாக்கா:
50,000 ரிங்கிட் மோசடி செய்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆலயத்தின் தலைவர், செயலாளருக்கு 6 நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அந்த ஆலய நிதியிலிருந்து 50,000 ரிங்கிட் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, மாநிலத்தில் உள்ள ஒரு ஆலயத்தின் தலைவர் செயலாளருக்ககு ஆயர்கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆறு நாட்கள் காவல் விதித்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அதிகாரி விசாரணைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதை அடுத்து 61, 75 வயதுடைய சந்தேக நபர்களை நேற்று முதல் ஜூன் 23 வரை ஆறு நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்மான் அப்துல் கானி அனுமதி அளித்தார்.
முன்னதாக இரண்டு சந்தேக நபர்களும் நேற்று காலை 11.45 மணியளவில் மலாக்கா எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளித்தபோது கைது செய்யப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm