
செய்திகள் மலேசியா
யூசோப் ராவ்தர் மொசாட் முகவர் என்ற கூற்றுக்களை போலிஸ் விசாரிக்க வேண்டும்: அரசு சாரா இயக்கங்கள்
கோலாலம்பூர்:
யூசோப் ராவ்தர் மொசாட் முகவர் என்ற கூற்றுக்களை போலிஸ் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
முகமது யூசோப் ராவ்தர் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட்டின் முகவராக இருக்கலாம்.
ஆகையால் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க போலிசார் விசாரிக்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் ஆராய்ச்சி உதவியாளரான அவர் 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலின் இருப்பை ஆதரித்துள்ளார்.
மேலும் ஜெருசலேம் மீதான அரபு உரிமை கோரல்களை அவர் நிராகரித்ததுள்ளார்.
இதன் அடிப்படையில் பல அரசு சாரா இயக்கங்கள் போலிஸ்க்கு இந்த அழைப்பை விடுத்தன.
யூசோப்பின் அறிக்கையை இஸ்ரேலிய சர்வதேச செய்தி இணையதளத்தில் இன்னும் அணுகலாம் என கூறப்படுகிறது.
இந்த விஷயம் சாத்தியமான வெளிநாட்டு தலையீடு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியதாக நாடி ஜெமிலாங் இயக்கத்தின் செயலக உறுப்பினர் டுல் ஹில்மி ஜைனோல் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm