நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முற்றும் கம்போடியா - தாய்லாந்து மோதல்: கம்போடிய சூதாட்ட விடுதிகளில் பணிபுரியும் தாய்லாந்துக் குடிமக்கள் நாடு திரும்புமாறு தாய் ராணுவம் உத்தரவு

பேங்காக்:

கம்போடிய சூதாட்ட விடுதிகளில் பணிபுரியும் தாய்லாந்துக் குடிமக்கள் வீடு திரும்புமாறு தாய்லாந்து ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் தாய்லாந்தைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டதாக தாய்லாந்து ராணுவம் கூறியது.

கம்போடியாவும் தாய்லாந்தும் எல்லைப் பூசலில் ஈடுபட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கடி அதிகரித்து வருகிறது.

கம்போடியாவின் பொய்பெட் (Poipet) நகரில் உள்ள பல சூதாட்ட விடுதிகளில் தாய்லாந்துக் குடிமக்கள் பலர் வேலை செய்கின்றனர்.

பொய்பெட் நகர் தாய்லந்தின் எல்லைக்கு அருகே இருப்பதால் தாய்லாந்து மக்கள் பலரும் தினசரி எல்லையைக் கடந்து வேலையிடத்துக்குச் செல்வதுண்டு.

பொய்பெட்டில் இருக்கும் தாய்லந்து மக்கள் அனைவரும் உடனே நாடு திரும்பும்படி ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset