நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

புது டெல்லி: 

இஸ்ரேலும் ஈரானும்  போர் சண்டையை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
கனடாவில் ஜி7 உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

இந்தக் கூட்டமைப்பில் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள
இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரான் முன்னுக்கு வர வேண்டும் என்றார்.

பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், இஸ்ரேல் - ஈரான்  போரைத் தணிக்க வழியைக் கண்டறிய வேண்டும் என்பதே ஜி7 தலைவர்களின் எதிர்பார்ப்பு. இது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கக் கூடும் என்றார்.

பின்னர்  இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஜி7 தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்றும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே ஜி7 தலைவர்களின் நிலைப்பாடு என்றும் கூட்டறிக்கை விடப்பட்டது.

இந்தக் கூட்டத்திலிருந்து டிரம்ப் பாதியிலேயே கிளம்பிவிட்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset