நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது; சட்டமன்றம் கலைப்பு தொடர்பாக அறிவிப்பைத் தாம் வெளியிடுவேன்: சபா மாநில முதலமைச்சர் ஹஜிஜி நோர் அறிவிப்பு 

புத்தாதான்: 

17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் சபா மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் நேரம் குறித்து முதலமைச்சர் என்ற முறையில் தாம் அறிவிப்பேன் என்று சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் கூறினார். 

சபா மாநில சட்டமன்றம் கலைப்பு  தொடர்பாக தாம் யோசித்து வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். 

விரைவாகவோ அல்லது தாமதமாகவோ கண்டிப்பாக சபா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று ஹஜிஜி நோர் சொன்னார். 

சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணி நம்பிக்கை கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எட்டவில்லை என்று அவர் சொன்னார். 

இவ்வாண்டு நவம்பர் மாதம் அல்லது அதற்கு முன்பாக சபா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset