நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைமை நீதிபதி நியமனம் குறித்துக் கருத்து பகிர வேண்டாம்: சிலாங்கூர் ஆட்சியாளர்

பெட்டாலிங் ஜெயா:

நாட்டின் தலைமை நீதிபதி நியமனம் குறித்து யாரும் ஆதாரமற்ற கருத்துகளைப் பகிர வேண்டாம் என்று சிலாங்கூர் ஆட்சியாளர், சுல்தான் சராஃபுடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.

269-ஆவது ஆட்சியாளர் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய அம்சங்களில் புதிய தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி மற்றும் பிற உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது அடங்கும் என்று சுல்தான் கூறினார்.

நீதிபதி நியமனம் குறித்துப் பிரதமர், ஆட்சியாளர்கள் ஆகியோர் ஆலோசனை செய்வர்.

அதன்பின் அது குறித்து பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடம் கொண்டு செல்லப்படும் என்றும் நீதிபதியின் நியமனம் குறித்து அவரே முடிவு செய்வார் என்றும் சிலாங்கூர் ஆட்சியாளர் தெளிவுப்படுத்தினார்.

சட்டத்துறையைப் பாதுகாக்கவும், நீதியின் கொள்கையை நிலைநிறுத்தவும், கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள செயல்முறை வெளிப்படையாகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவே, ஒரு விஷயத்தின் முழுமையான மற்றும் நியாயமான உண்மைகளை முதலில் பெறாமல் எதிர்மறையான குற்றச்சாட்டுகளைச் செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset