நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பமான வானிலை ஜூலை மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா

பெட்டாலிங் ஜெயா:

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வெப்பமான வானிலை வழக்கமானது மட்டுமே.

சில பகுதிகளில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை எட்டலாம். 

இந்த வெப்பம் இம்மாத இறுதி வரை நீடிக்கும் என்று அதன் இயக்குநர் டாக்டர் முஹம்மத் ஹிஷாம் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் அருகே உருவாகியுள்ள வெப்பமண்டல புயல் காரணமாக அடுத்த வாரம் மழை குறைவாக இருக்கும். 

எல் நினோ நடுநிலையில் இருப்பதால் தீவிர வெப்ப அலை ஏற்படாது.

வெப்பமண்டல சூறாவளி காரணமாக பேராக்கில் மேக மழை உருவாக்கும் நடவடிக்கைகள் தற்போது பொருத்தமற்றவை. 

வானிலை மாற்றங்கள் ஏற்பட்டால் தகவல் அளிக்கப்படும் என்றாரவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset