நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக சுமார் RM850 மில்லியன் வரை செலவிடப்பட்டுள்ளது: ஹஜிஜி நோர்

கோத்தா கினாபாலு:

கடந்த நான்கு ஆண்டுகளில் சபா மாநில அரசு கல்வி உதவித் திட்டங்களுக்காக RM848 மில்லியனுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்துள்ளார்.

இது சபா மாஜு ஜெயா திட்டத்தின் கீழ் மனித வள வளர்ச்சிக்கான அரசின் நிலைப்பாட்டைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சபா மாநிலத்தில் அனைவரும் கல்வியிலிருந்து விடுப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்று நேற்று நடைபெற்ற 29-ஆம் கல்வி மாநாட்டிலும் மலேசியத் தலைமை ஆசிரியர் சங்கத்தின் 3-ஆம் பொதுக்குழு கூட்டத்திலும் ஹஜிஜி நோர் தெரிவித்தார்.

2021-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சபாவில் 14 புதிய கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்டன.

இதற்காக மொத்தமாக RM164.14 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

2,10,000 மாணவர்கள் இத்திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset