நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு முத்தியாரா எல்ஆர்டி திட்டம் செயல்பாட்டுக்கு தயாராகிறது: முதலமைச்சர்

ஜோர்ஜ் டவுன்: 
பினாங்கு முத்தியாரா எல்ஆர்டி திட்டம் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய நெடுஞ்சாலை ஒழுங்கமைப்பு நிறுவனம் (MRT Corp) கடந்த ஜூலை 15ஆம் தேதி, திட்டத்தின் மூல கட்டுமான ஒப்பந்தமான CMC1-க்கு, SRS Consortium Sdn Bhd நிறுவனத்திற்கு திட்டத்தை செயல்படுத்துவதற்கான உறுதி கடிதத்தை வழங்கியுள்ளது பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் யொவ் கூறினார்

திட்டத்துக்கான மூல கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில், மின், நீர் மற்றும் தொலைதொடர்பு வசதிகளை மாற்றுதல், சாலை விரிவாக்கம், அடிப்படை பணி, மற்றும் தள அமைப்பு பணிகள் ஆகியவை அடங்கும். திட்டத்திற்கான பாதையில் ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற பகுதிகளில் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முத்தியாரா லைன் என அழைக்கப்படும் இந்த எல்ஆர்டி திட்டம், பினாங்கின் முதல் எல்ஆர்டி திட்டமாகும். இது பினாங்கு போக்குவரத்து மாஸ்டர் திட்டத்தின் (PTMP) ஒரு முக்கிய அங்கமாகும். இதன் நோக்கம், பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்தி, தீவிலும், நிலப்பகுதியிலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதாகும்.

திட்டத்தின் மீதமுள்ள இரண்டு பகுதிகளுக்கான ஒப்பந்தங்கள் — Macallum Street Ghaut முதல் பினாங்கு சென்ட்ரல் வரை செல்லும் CMC2, மற்றும் முழு திட்டத்திற்கான ரயில் அமைப்புகள் தொடர்பான ஒப்பந்தங்கள் — தற்போது விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset