நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் பூட்டியிருந்த வீட்டில் 72 வயது முதியவர் சடலமாக மீட்பு

ஜோர்ஜ்டவுன் 
பினாங்கின் சுங்கை பினாங்க் பகுதியில் உள்ள ஒரு பூட்டியிருந்த வீட்டில், 72 வயதுடைய முதியவரின் உடல் சடலமாக இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பினாங்கில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 12.45 மணியளவில், ஜெலுடோங் பகுதியில் உள்ள மலிவுவிலை அடுக்ககம் (Flat) பகுதியிலிருந்து குறித்து அவசர அழைப்பு வந்தது என பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் இயக்குனர் (பணிகள்) துணை இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் கூறினார்.

உடனடியாக ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத்திலிருந்து குழுவினர் 12.51 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

“9 பேர் கொண்ட மீட்பு குழு, சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி அந்த வீட்டிற்குள் நுழைந்தது. உள்ளே, ஒருவர் உணர்வின்றி, உயிரில்லாமல் கிடந்ததை கண்டனர். அவரை பின்னர் அந்நபர் சியூ ஸே சன் (Chew Sze Sun) என அடையாளம் கண்டனர்,” என்றார் அவர்.

அந்த இடத்திற்கு வந்த மருத்துவ குழு, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதை உறுதி செய்தது. அவரது உடலை மீட்கும் பணிகள் 1.15am-க்கு நிறைவடைந்தன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset