நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் பெட்டாலிங்கில் சட்டவிரோத வெளிநாட்டு வியாபாரிகள் மீது கோலாலம்பூர் மாநகர் மன்றம் நடவடிக்கை

கோலாலம்பூர்: 
புக்கிட் பெட்டாலிங்கில் உள்ள ஐநா அகதிகள் உயர்மட்ட ஆணையக் (UNHCR) கட்டிடத்துக்கு வெளியே நடைபாதையில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்த வெளிநாட்டு வியாபாரிகளுக்கு எதிராக, கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சோதனையின் போது, உரிய அனுமதியின்றி பொதுப் பயன்பாட்டு இடங்களில் அமைக்கப்பட்ட மேசைகள், நாற்காலிகள், கூடாரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகர் மன்றம் தெரிவித்தது.

மொத்தம் நான்கு பறிமுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“பொது நடைபாதைகள் மக்கள் பயன்படுத்த வசதியாக இருக்க வேண்டும். அவை தடையாக இருக்கக்கூடாது,” என மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்தது.

கோலாலம்பூர் நகரம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட முக்கிய இடங்களில் தொடர்ந்தும் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடைபெறும் என்றும் அது கூறியது.

இதே போன்ற சட்டவிரோத செயல்களை பொதுமக்கள் https://adukl.dbkl.gov.my இணையதள முகவரி மூலம் புகார் செய்யலாம் என்றும் மாநகர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset