நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலுக்கு 20 அரபு, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம்

துபாய்: 

ஈரான் மீது இஸ்ரேல் கொடூரமாக   தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

துருக்கி, எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, பாகிஸ்தான், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இராக், அல்ஜீரியா, பஹ்ரைன், புருணே, சாட், கொமரோஸ், ஜிபூட்டி, குவைத், லிபியா, மொரிடானியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்தக் கூட்டறிகையை வெளியிட்டுள்ளனர்.

அதில், சர்வதேச சட்டங்களுக்கும், ஐ.நா.வின் வழிகாட்டுதல்களுக்கும் எதிராக ஈரானின் அணுசக்தி மையங்களிலும், ராணுவ தளங்களிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

இதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈரானின் அணுசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதால் அணுக் கதிர் வீச்சு பரவும் அபாயம் உள்ளது. எனவே, அந்த மையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

மத்தியக் கிழக்குப் பிராந்தியம் அணு ஆயுதமற்ற பகுதியாக இருக்க வேண்டும் என்பதே அரபு நாடுகளின நீண்டகால நிலைப்பாடு. அந்த நிலையைத் தொடர்வதற்கான அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset