நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: ஏர் ஆசியா விமான சேவை ரத்து 

கோலாலம்பூர்: 

இந்தோனேசியாவின் லெவோதொபி மலையில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளதால் பாலி, லொம்பொக் பகுதிக்குச் செல்லும் ஏர் ஆசியா விமான சேவைகள் ரத்து அல்லது மீண்டும் மறுஅட்டவணையிடப்பட்டுள்ளது. 

மவுன்ட் லொவொதொபியின் கிழக்கு பகுதியில் இந்த எரிமலை சீற்றம் ஏற்பட்டு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை புகை மூட்டம் ஏற்பட்டது. 

இந்தோனேசியாவின் நுசா தெங்காரா பகுதியில்  எரிமலை சீற்றம் காரணமாக புகைமூட்டம் அதிகளவில் ஏற்பட்டு ஏர் ஆசியான் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 

பாலி நகருக்குப் புறப்படும் அல்லது அங்கிருந்து வரும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு மறுஅட்டவணையிடப்படுகிறது. 

இந்த தகவலை ஏர் ஆசியா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. 

ஏர் ஆசியா மலேசியா, ஏர் ஆசியா இந்தோனேசியா, ஏர் ஆசியா எக்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset