நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யா நாட்டின் உயரிய பாதுகாப்பு அதிகாரியைச் சந்திக்கிறார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 

பியோங்யாங்: 

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்யா நாட்டின் உயரிய பாதுகாப்பு அதிகாரியும் பாதுகாப்பு ஆலோசகருமான SERGEI SHOIGUஐ தலைநகர் பியோங்யாங்கில் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பில் சிறப்பு இராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக வடகொரிய அரசு தொலைக்காட்சியான KCNA தெரிவித்தது. 

மாஸ்கோ KURSK பிராந்தியத்தில் அதன் இராணுவ கட்டமைப்பை நிறுவவுள்ளதால் வட கொரியா ஆள்பல தேவை  அதன் பங்காக 5000 இராணுவ கட்டுமான தொழிலாளர்களை அனுப்பவுள்ளது. 

வட கொரியா அதன் இராணுவ வீரர்களை ரஷ்யா நாட்டிற்கு அனுப்புவது என்பது ஐநாவின் தடை நடவடிக்கைக்கு எதிரான செயலாகும் என்று தென்கொரியா வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது. 

உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா சண்டையிடுவதால் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரியா ஆயிரக்கணக்கில் இராணுவ வீரர்களை களத்தில் இறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset