நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இனி இரக்கம் காட்ட முடியாது: இஸ்லாமியர்களுக்கும் - யூதர்களுக்கும் இடையேயான கைபர் போரை நினைவுகூர்வதுபோல் வரைபடம் வெளியிட்டு அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை 

தெஹ்ரான்: 

ஈரான் - இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். 

அமெரிக்கா, இஸ்ரேல் மிரட்டல்களைத் தொடர்ந்து கமேனி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இதே மிரட்டலை ஆங்கிலம், ஃபார்ஸியில் வெளியிட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தற்போது அதனை ஹீப்ரூ மொழியில் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து சில மணி நேரங்களிலேயே மூன்று மொழிகளில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும், ஃபார்ஸி மொழியில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கையில் வாளேந்திய நபர் கோட்டை வாயிலில் இருப்பதுபோன்ற சித்தரிப்புப் படத்தை இணைத்து, ‘போர் தொடங்கியது’ என்று குறிப்பிட்டுள்ளார். கோட்டையின் மேலே குண்டு மழை பொழிவது போலவும் காட்சி உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமியர்களுக்கும் - யூதர்களுக்கும் இடையேயான கைபர் போரை நினைவுகூர்வதுபோல் இந்த வரைபடம் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சூழலில்தான், “இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிரான நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.

இதனால் ஈரானின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற பதற்றம் உருவாகியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset