நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ளி அஹ்மத்

புத்ராஜெயா:

ஆப்டோமெட்ரி சட்ட மசோதா வரும் அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

 சுகாதார அமைச்சர் சூல்கிப்ளி அஹ்மத் இதனை தெரிவித்தார்.

மலேசியாவில் ஆப்டோமெட்ரி தொழிலின் அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு பிரத்யேக கட்டமைப்பாக இந்த முன்மொழியப்பட்ட சட்டம் செயல்படும்.

இது ஆப்டோமெட்ரிஸ்டுகளுக்கான நடைமுறை, பயிற்சி, பதிவு, கடமைகளின் நோக்கத்தை நிர்வகிக்கும் ஒரு தனிச் சட்டமாக இருக்கும்.

மேலும் ஆப்டோமெட்ரிஸ்டுகளிடமிருந்து வேறுபட்டது என்று அவர் கூறினார்.

இந்த மசோதா, ஆப்டிகல் தயாரிப்புகளின் இணைய விற்பனையையும்,  பயனீட்டாளர் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான அமலாக்க விதிகள், அபராதங்களையும் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சட்டம் ஆப்டோமெட்ரியை அங்கீகரிக்கப்பட்ட, தகுதிவாய்ந்த, பாதுகாப்பான, பயனுள்ள தொழில்முறைத் துறையாக உயர்த்துவதில் முக்கியமானது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட 10,000 பேருக்கு ஒரு ஆப்டோமெட்ரிஸ்ட் என்ற விகிதத்தை மலேசியா இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset