நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவின் பண வீக்கம் 12.54 சதவீதமாக அதிகரிப்பு

புது டெல்லி:

இந்தியாவின் மொத்த பொதுப் பணவீக்கம் கடந்த அக்டோபரில்  5 மாதங்களில் இல்லாத அளவில் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு வர்த்தகத்துறை  அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி துறை பொருள்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதையடுத்து, கடந்த அக்டோபரில் மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது, 5 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

இப் பணவீக்கம் நடப்பாண்டு ஏப்ரலில் இருந்து தொடர்ந்து ஏழு மாதங்களாக இரட்டை இலக்க அளவிலேயே இருந்து வருகிறது. பொது பணவீக்கம் நடப்பாண்டு செப்டம்பரில் 10.66 சதவீதமாகவும், 2020 அக்டோபரில் 1.31 சதவீதமாகவும் இருந்தது.

Inflation in India isn't quite the same as in other large economies

கடந்த மே மாதத்தில் இப்பணவீக்கம் மிகவும் உச்சபட்சமாக 13.11 சதவீதத்தை தொட்டிருந்தது. அதையடுத்து, ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபரில்தான் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதற்கு, உலோகங்கள்,  உணவுப் பொருள்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ரசாயனம், மினரல் எண்ணெய்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து காணப்பட்டதே முக்கிய காரணம்.

உற்பத்தி துறை தயாரிப்புகளுக்கான பணவீக்கம் கடந்த அக்டோபரில் 12.04 சதவீதமாக அதிகரித்திருந்தது. இது, முந்தைய செப்டம்பரில் 11.41 சதவீதமாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset