
செய்திகள் வணிகம்
488 வீடுகள், நவீன மண்டபம் உட்பட அனைத்து வசதிகளையும் EHSAN WIDURI அடுக்குமாடி குடியிருப்பு கொண்டிருக்கும்: டத்தோ அப்துல் ஹமித்
நீலாய்:
488 வீடுகள், நவீன மண்டபம் உட்பட அனைத்து வசதிகளையும் EHSAN WIDURI அடுக்குமாடி குடியிருப்பு கொண்டிருக்கும்.
ஏசான் மேம்பாட்டு குழுமத்தின் தலைவர் டத்தோ பி வி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
ஏசான் குழுமத்தின் மேம்பாட்டு திட்டத்தின் மற்றொரு மைல்கல் திட்டமாக EHSAN WIDURI விளங்குகிறது.
அதன் மாதிரி வீடு, விற்பனை வளாகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
பண்டார் பாரு நீலாய் வட்டாரத்தில் அனைத்து வசதிகளுடன் இக் குடியிருப்பு பகுதி கட்டப்படவுள்ளது.
730 முதல் 980 சதுர அடியில் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளது.
அதே வேளையில் மிகப் பெரிய நவீன பன்னோக்கு மண்டபம் இக் குடியிருப்பில் அமையவுள்ளது.
கடைகள், அலுவலகங்கள், கார் நிறுத்துமிடங்கள் என அனைத்தும் இங்கு அமையவுள்ளது.
குறிப்பாக விஸ்மா ஏசானும் இங்கு அமையவுள்ளது. ஆகையால் வீடுகள் வாங்குபவர்கள் எது பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
காரணம் மேம்பாட்டாளரின் தலைமையகமும் இங்கு அமையவுள்ளது.
இதை தவிர்த்து முன்னணி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பெரிய பேரங்காடிகள் என அனைத்தும் இக் குடியிருப்பு பகுதிக்கு அருகே அமைய உள்ளது.
மேலும் கோலாலம்பூர், கேஎல்ஐஏ விமான நிலையம் என அனைத்து இடங்களுக்கு செல்வதற்கு மிகவும் வசதியான இடமாக இது அமைந்துள்ளது.
அதே வேளையில் இங்கு வீடுகள் வாங்குபவர்களுக்கு கடன் வழங்கவும் வங்கிகள் தயாராக உள்ளன.
மேலும் வீடுகள் வாங்குவர்களுக்கு உரிய வழிக்காட்டல்களை வழங்கவும் ஏசான் குழுமம் தயாராக உள்ளது.
ஆகவே வீடுகள் வாங்க விரும்புபவர்கள் நேரடியாக EHSAN WIDURI க்கு வரலாம் என டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
August 8, 2025, 12:29 pm
மலேசியாவில் புகழ் பெற்ற டோம்யாம் உணவகம் ராமநாதபுரத்தில் திறப்பு
August 7, 2025, 9:29 pm
சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவும்
August 5, 2025, 10:39 am
மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்தது
August 4, 2025, 6:30 pm
பிரிக்பீல்ட்ஸில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை கஃபே சமூக கடப்பாடுடன் செயல்படுகிறது
August 1, 2025, 6:09 pm