
செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் வலுவடைந்தது
கோலாலம்பூர்:
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்
4.12-க்கு வர்த்தகமானது.
நேற்று ரிங்கிட்டின் தொழில்நுட்பத் திருத்தம் அதிகப்படியான கொள்முதல் நடவடிக்கையின் காரணமாக ஒரு சில வர்த்தகர்கள் லாபம் ஈட்ட காரணமாக இருந்தது என்று மலேசிய முவாமாலாட் வங்கியின், தலைமைப் பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid,
இருப்பினும், நவம்பர். டிசம்பர் மாதங்களில் வளர்ந்த நாட்டின் திறந்த சந்தைக் குழுவின் (FOMC) கூட்டத்தில் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவது பற்றிய கருத்து இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
அதன்படி, அமெரிக்க தனிநபர் நுகர்வு செலவு பணவீக்கம் குறித்த இன்றிரவு அறிவிப்பு முதலீட்டாளர் சமூகத்தால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் வலுவாக வர்த்தகம் செய்யப்பட்டது.
ஜப்பானிய யெனுக்கு எதிராக நேற்று 2.8634/8674 ஆக இருந்த மலேசிய ரிங்கிட் இன்று 2.8442/8504 ஆகவும், யூரோவுக்கு எதிராக 4.6157/6218 இலிருந்து 4.6084/6179 ஆகவும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.5284/5391 இலிருந்து 5.5284/53918 ஆகவும் உயர்ந்தது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.2204/2249 இலிருந்து 3.2109/2181 ஆகவும், பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 7.40/7.41 இலிருந்து 7.36/7.39 ஆகவும் அதிகரித்தது.
ஒரு மலேசிய ரிங்கிட் 20 இந்திய ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm