செய்திகள் வணிகம்
எந்த வயதிலும் ஒருவர் பிரபலமாகலாம்: அதற்கு மார்கரெட் சோலாவும் ஓர் உதாரணம்
லூசாகா:
80 வயதைக் கடந்த அவர் ஆப்பிரிக்காவின் சாம்பியா (Zambia) நாட்டைச் சேர்ந்தவர் மார்கரெட் சோலா (Margret Chola) . தற்போது அவருக்கு Instagram தளத்தில் 225,000 ரசிகர்கள் உள்ளனர்.
அதிலுள்ள புகைப்படங்களில் அவர் அணியும் கண்ணைக் கவரும் வித்தியாசமான ஆடைகளும் அணிகலன்களும் இணையவாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவருடைய பேத்தி டயானா கௌம்பா (Diana Kaumba) நியூயார்க் நகரில் ஓர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். 2023ஆம் ஆண்டு முதல் கௌம்பா அத்தகைய புகைப்படங்களை எடுத்துவருவதாக BBC தெரிவித்தது.

அவர் ஆரம்பத்தில் விளையாட்டாகச் சோலவை தனது ஆடைகளை அணியவைத்துப் புகைப்படம் எடுத்தார். அதை Instagramஇல் பதிவிட்டதும் அதில் கிடைத்த வரவேற்பைக் கண்டு மேலும் பல படங்களை அவர் பதிவிடத் தொடங்கினார்.
வாழ்க்கையில் பல துன்பங்களைக் கடந்து இப்போது கிடைக்கும் இந்த அன்பும் புகழும் தனக்கு உற்சாகத்தை அளிப்பதாகக் கூறுகிறார் சோலா. தனது பேத்தியுடன் உள்ள நெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஆதாரம்: BBC
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
