நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை

சென்னை:

சென்னை-ஜித்தா விமானப் பயண சேவையை சவூதி ஏர்லைன்ஸ் அக்டோபர் 2 முதல் தொடங்க உள்ளது.

வாரந்தோறும் திங்கள், புதன் ஆகிய  இரண்டு நாட்களில் சென்னை-ஜித்தா  விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

கொரானாவுக்கு பிறகு சுமார் மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு சென்னையிலிருந்து ஜித்தாவுக்கு செல்ல நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. இது புனித உம்ரா பயணம் செல்வோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்நிலைில், சவூதி அரேபியாவின் 94வது தேசிய நாள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சவூதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் சவூதியா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள், அலுவலர்கள், பல்வேறு டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள், வணிகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset