செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
கோலாலம்பூர்:
ப்ரெண்ட் கச்சா எண்ணெய்யின் உலகளாவிய விலை உயர்வின் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் வலுப்பெற்றுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் 4.25-க்கு விற்பனையானது.
இருப்பினும், மேற்கு ஆசியாவில் இன்னும் தணியாத பதட்டங்களால் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து பாதிக்கப்படலாம் என்று முவாமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர், Dr Mohd Afzanizam Abdul Rashid தெரிவித்தார்.
அதே நேரத்தில், உயரும் அமெரிக்க கருவூல பத்திரங்கள் ரிங்கிட்டுக்கு ஏற்றம் இறக்கத்தை அளித்தன.
இந்நிலையில் யூரோவிற்கு எதிராக 4.6920/6996 இலிருந்து 4.6738/7040 வரை மலேசிய ரிங்கிட் உயர்ந்தது.
அதுமட்டுமல்லாமல், மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் வலுவாக வர்த்தகமானது.
ஜப்பானிய யெனுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் நேற்று 2.8857/8909 இலிருந்து 2.8750/8937 ஆக உயர்ந்தது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 5.5953/6044 இல் இருந்து 5.5725/6085 ஆக உயர்ந்தது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.2832/2888 இலிருந்து 3.2661/2874 ஆகவும் இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக நேற்று 272.8/273.4 லிருந்து 271.4/273.3 ஆகவும் மலேசிய ரிங்கின் மதிப்பு வலுபெற்றது.
1 மலேசிய ரிங்கிட்டிற்கு எதிராக இந்திய ரூபாய் 19.60-க்கு வர்த்தகமானது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 9, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 5, 2024, 3:31 pm
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
October 1, 2024, 11:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 30, 2024, 10:30 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 28, 2024, 4:25 pm
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
September 27, 2024, 10:33 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் வலுவடைந்தது
September 15, 2024, 5:15 pm