
செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
பெட்டாலிங் ஜெயா:
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 1 அமெரிக்க டாலர் 4.12 மலேசிய ரிங்கிட்டிற்கு விற்பனையானது.
அமெரிக்கா ரிசர்வ் குழு தலைவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதில் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கான உறுதியை வெளிப்படுத்துகின்றது.
அதோடு இதனை விரைந்து முன்னெடுக்காமல் படிப்படியாக மேற்கொள்ளவிருப்பதையும் காட்டுகின்றது. இது நோக்கம் நடுநிலையானது என மலேசிய முவாமாலாட் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid தெரிவித்தார்.
இதனிடையே, அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக இப்போது மலேசிய ரிங்கிட் உள்ளது என்று MUFG வங்கியின் மூத்த ஆய்வாளரான லாயிட் சான் கூறினார்.
இதனால் மலேசியாவின் முதலீட்டு வருமானம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
அதைத் தொடர்ந்து, ரிங்கிட் இன்று வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், முக்கிய நாணயக் குழுவுடன் ஒப்பிடும்போது ரிங்கிட் வலுவடைந்து வர்த்தகம் செய்யப்படுகிறது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.2175/2217 இலிருந்து 3.2057/2118 ஆகவும், தாய் பாட்க்கு எதிராக 12.8037/8248 இலிருந்து 12.7082/7420 ஆகவும் அதிகரித்த ஆசியான் நாணயங்களுக்கு எதிராகவும் மலேசிய ரிங்கிட் சிறப்பாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணி 1 மலேசிய ரிங்கிட் 20 இந்திய ரூபாய்க்கு வர்த்தகமானது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
August 8, 2025, 12:29 pm
மலேசியாவில் புகழ் பெற்ற டோம்யாம் உணவகம் ராமநாதபுரத்தில் திறப்பு
August 7, 2025, 9:29 pm
சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவும்
August 5, 2025, 10:39 am
மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்தது
August 4, 2025, 6:30 pm
பிரிக்பீல்ட்ஸில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை கஃபே சமூக கடப்பாடுடன் செயல்படுகிறது
August 1, 2025, 6:09 pm