
செய்திகள் வணிகம்
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
ஈப்போ:
இங்குள்ள இயோன் பாலிமில் அனைத்துலக பிரமாண்ட இந்தியர் விற்பனையும் பிரபலமான இந்தியர் உணவு திருவிழாவும் மிகவும் விமரிசையாக நடந்தேறியது. இத்தகைய வணிக கண்காட்சி இளைய தொழில் முனைவோர் வணிகத்துறையில் மேம்பாடு காண பேருதவியாக அமைவதோடு அவர்களின் வாழ்வாதாரம் செழித்தோங்கும் என்று இந்த நிகழ்வை தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சரும், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ.சிவகுமார் கூறினார்.
இங்கு சுமார் 90 இந்திய தொழில்முனைவர்கள் தங்கள் வியாபாரத்தை அறிமுகம் செய்து வருகின்றனர். இதில இந்தியர்களின் பாரம்பரிய வியாபாரமும் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். அதோடு இத்தகைய காலகட்டத்திற்கு ஏற்றது போல நவீன உணவு முறைகளை இங்குள்ள இளைய சமூகத்தினர் தயார் செய்து வியாபாரம் செய்வது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கருத்துரைத்தார்.
இந்த இந்தியர் வணிகம் மற்றும் இந்தியர் உணவு திருவிழா கண்காட்சியை கெடாவிலிருந்து ஜோகூர் பாரு வரை ஒவ்வொரு ஆண்டும் நடத்திக்கொண்டு வருகிறோம். இதற்கு இந்திய வணிகர்கள் மற்றும் பயனீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் வாயிலாக அதிகமான தொழில்முனைவோர்கள் உருவாகி கொண்டு வருகின்றனர் என்று " கலர்ஸ் ஆப் இந்தியா" நிறுவனத்தின் தொழிலதிபர் ஜி.எம். ரவீந்திரன் கூறினார்.
இந்த வணிக கண்காட்சி வாயிலாக பயனீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாக்கும் பொருட்டு உள்நாட்டு், இந்திய நாட்டு் கலைஞர்கள் வருகையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். உள்நாட்டு கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது ஒரு தளமாக விளங்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm