
செய்திகள் வணிகம்
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட நீலாய் எஹ்சான் விடுரி அடுக்குமாடி வீடமைப்பு திட்டம் 2028ஆம் ஆண்டு நிறைவு பெறும்: டத்தோ அப்துல் ஹமித்
நீலாய்:
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட நீலாய் எஹ்சான் விடுரி அடுக்குமாடி வீடமைப்பு திட்டம் வரும் 2028ஆம் ஆண்டு நிறைவு பெறும்.
எஹ்சான் மேம்பாட்டு குழுமத்தின் தலைவர் டத்தோ பி வி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
எஹ்சான் குழுமத்தின் மேம்பாட்டு திட்டத்தின் மற்றொரு மைல்கல் திட்டமாக எஹ்சான் விடுரி விளங்குகிறது.
பண்டார் பாரு நீலாய் வட்டாரத்தில் அனைத்து வசதிகளுடன் இந்த வீடமைப்பு பகுதி கட்டப்படவுள்ளது.
730 முதல் 980 சதுர அடியில் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளது.
அதே வேளையில் மிகப் பெரிய நவீன பன்னோக்கு மண்டபம் இங்கு அமையவுள்ளது.
கடைகள், அலுவலகங்கள், கார் நிறுத்துமிடங்கள் என அனைத்தும் இங்கு அமையவுள்ளது.
குறிப்பாக விஸ்மா எஹ்சானும் இங்கு அமையவுள்ளது. ஆகையால் வீடுகள் வாங்குபவர்கள் எது பற்றியும் கவலைப்பட வேண்டாம். காரணம் மேம்பாட்டாளரின் தலைமையகமும் இங்கு அமையவுள்ளது.
இதை தவிர்த்து முன்னணி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பெரிய பேரங்காடிகள் என அனைத்தும் இக்குடியிருப்பு பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.
மேலும் கோலாலம்பூர், கேஎல்ஐஏ விமான நிலையம் என அனைத்து இடங்களுக்கு செல்வதற்கு மிகவும் வசதியான இடமாக இது அமைந்துள்ளது.
அதே வேளையில் இங்கு வீடுகள் வாங்குபவர்களுக்கு கடன் வழங்கவும் வங்கிகள் தயாராக உள்ளன.
மேலும் வீடுகள் வாங்குவர்களுக்கு உரிய வழிக்காட்டல்களை வழங்கவும் எஹ்சான் குழுமம் தயாராக உள்ளது.
ஆகவே புதிதாக வீடுகள் வாங்க விரும்புபவர்கள் நேரடியாக எஹ்சான் விடுரி விற்பனை மையத்திற்கு வரலாம்.
மேலும் எஹ்சான் விடுரியின் அடித்தளம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
திட்டமிட்டப்படி 2028ஆம் ஆண்டுக்குள் இத் திட்டத்தை நிறைவு செய்ய எஹ்சான் இலக்கு கொண்டுள்ளது என்று டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 4:44 pm
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm