
செய்திகள் உலகம்
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
எனது அன்பான, மாண்புமிக்க ஈரான் மக்களுக்கு என் ஸலாம். அன்பு தளபதிகள், அறிஞர்களின் வீரமரணம், நிச்சயமாக அனைவருக்கும் கனமானது, மேலும் சில பொதுமக்களின் இழப்புக்கும் ஈரான் மக்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவிக்கிறேன்.
இறைவன் அவர்களின் புனித ஆன்மாக்களை தனது சிறப்பு கருணையால் உயர்த்துவானாக என்று நம்புகிறேன்.
நான் எனது அன்பு மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் விஷயம் என்னவெனில், சியோனிஸ்ட் ஆட்சி ஒரு பெரிய தவறு செய்துவிட்டது. மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை அது செய்துள்ளது. ஒரு மோசமான செயலை அரங்கேற்றி உள்ளது. இறைவனின் அருளால், அதன் விளைவுகள் அவர்களை பரிதாபகரமான நிலைக்கு ஆளாக்கும்.
ஈரான் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற வீரர்களின் இரத்தத்தை மன்னிக்க மாட்டார்கள்.
தங்கள் வான்வெளி மீறப்பட்டதை புறக்கணிக்க மாட்டார்கள்.
எங்கள் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன. நாட்டின் பொறுப்பாளர்களும் அனைத்து மக்களும் ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக உள்ளனர்.
இன்று நாட்டின் பல்வேறு அரசியல் பிரிவுகளிலிருந்தும், மக்களின் பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஒரே மாதிரியான செய்திகள் வெளிவந்துள்ளன.
இழிவான, கயவர், பயங்கரவாத சியோனிஸ்ட் அடையாளத்துக்கு எதிராக வலிமையுடன் நாம் செயல்பட வேண்டும் என்று அனைவரும் உணர்கிறார்கள்.
வலிமையுடன் நாம் செயல்பட வேண்டும். இறைவனின் அருளால் வலிமையுடன் செயல்படுவோம். அவர்களுடன் எந்த சமரசமும் செய்யப்படாது.
இனி அவர்களுக்கு வாழ்க்கை கசப்பானதாக மாறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் தாக்கிவிட்டு முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.
இந்தப் போரை அவர்கள்தான் தொடங்கினார்கள், அவர்கள்தான் போரை உருவாக்கினார்கள். அவர்கள் செய்த இந்த மாபெரும் குற்றத்திலிருந்து தங்களைப் பாதுகாப்பாக விடுவித்துக் கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் இந்த இழிவான எதிரிக்கு கடுமையான அடிகளை வழங்கும். மக்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக உள்ளனர். இறைவனின் அருளால் ஈரான் குடியரசு சியோனிஸ்ட் ஆட்சியை வெல்லும்.
அன்பு மக்களே, இதை அறிந்து உறுதியாக நம்புங்கள், இந்த விஷயத்தில் எந்தக் குறையும் ஏற்படாது என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அஸ்ஸலாம் அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
ஆதாரம்: farsi.Khamenei.ir
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm