
செய்திகள் உலகம்
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
சாவ் பாலோ:
வியட்னாம் ‘பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பில் பங்காளித்துவ நாடாக அதிகாரபூர்வமாக இணைவதாக பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பில் 10-ஆவது நாடாக வியட்னாம் இணைந்துள்ளது.
வளரும் பொருளியலைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாக 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை இடம்பெற்றிருந்தன. பின்னர், தென்னாப்பிரிக்கா அதில் இணைந்து கொண்டது.
தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்ட அந்த அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், இந்தோனீசியா ஆகியவை இணைந்தன.
பெலருஸ், பொலிவியா, கஸகிஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகியவை ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பங்காளித்துவ நாடுகளாக உள்ளன.
இந்த ஆண்டு (2025) ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை பிரேசில் ஏற்றுள்ளது.
அந்தக் கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக இணைந்துகொள்வது தொடர்பில் கலந்துரையாட வியட்னாம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்தது.
வியட்னாமிய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாகக் கூறிய பிரேசில், நீடித்த நிலைத்தன்மை மிக்க மேம்பாடு, ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பில் வியட்னாம் மேற்கொள்ளும் முயற்சி ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் நலன்களுடன் ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm