செய்திகள் வணிகம்
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
மும்பை:
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உறுதியான டாலர் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவடைந்தது.
ஃபியூச்சர் டிரேடிங்கில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 7.27 சதவிகிதம் கடுமையாக உயர்ந்து 74.40 அமெரிக்க டாலராக உள்ளது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 86.25 ஆக தொடங்கி ரூ.85.92 முதல் ரூ.86.25 என்ற வரம்பில் வர்த்தகம் ஆன நிலையில், இது அதன் முந்தைய முடிவை விட 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 2:00 pm
வரலாறு காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
March 6, 2026, 11:24 am
மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த முதலீடு: கடந்த ஆண்டு 426.7 பில்லியன் பதிவு
March 5, 2026, 4:14 pm
மார்ச் 5 முதல்–11 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
March 5, 2026, 4:13 pm
OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது – BNM
March 4, 2026, 12:18 pm
அமெரிக்க டாலருக்கு ஆதரவு அதிகரிப்பு: ரிங்கிட் மீது அழுத்தம்
March 4, 2026, 11:06 am
பிரபல வணிக சந்தைகளின் நுழைவினால் பாதிக்கப்படும் சிறு தொழில் வியாபாரிகள்: ரமலான் சந்தை விவாதம்
March 3, 2026, 4:42 pm
மேற்கு ஆசிய பதற்றத்திலும் RON95 விலை RM1.99-ல் நிலைபெறும்: அரசு கண்காணிப்பு தீவிரம்
March 2, 2026, 3:31 pm
