
செய்திகள் உலகம்
ஈரான் தாக்குதலைத் தொடங்கியது: அடுத்தடுத்து 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேலை நோக்கி ஏவியது
டெஹ்ரான்:
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க, 100-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை ஈரான் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ஈரானின் ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் அத்துமீறி துவங்கிய தாக்குதல்களில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட 3 முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால், எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பாக பதுங்கு குளிகளுக்கு செல்லுமாறு இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவப் படைகளின் செய்தித்தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அந்நாட்டு ஊடகங்களின் வெளியான செய்திகளில், ஈரான் அனுப்பிய ட்ரோன்கள் அனைத்தும் இஸ்ரேலின் எல்லையை அடைய சில மணி நேரமாகும், அதற்குள் இஸ்ரேல் அவற்றை தகர்க்கவில்லை என்றால் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானின் 100-க்கும் மேற்பட்ட பகுதிகளின் மீது இஸ்ரேல் சுமார் 200 போர் விமானங்களின் மூலம் இன்று (ஜூன் 13) அதிகாலை முதல் தாக்குதல்கள் நடத்தி போரை துவங்கியது.
ஈரான் அனுப்பிய ட்ரோன்கள் அனைத்தும் இஸ்ரேலின் எல்லையை அடைய சில மணி நேரமாகும், அதற்குள் இஸ்ரேல் அவற்றை தகர்க்கவில்லை என்றால் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும்இஸ்ரேலிய ஊடகங்கள் கூறியுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm